ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு காற்றில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம், எல்.ஜி பாலிமர்ஸ் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முதல் கட்டமாக அந்நிறுவனம், 50 கோடி ரூபாயை, இழப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.