இந்தியா

விக்ரம் லேண்டர் கருவி சேதம் அடையவில்லை

நிலவில் தரையிறங்கும் போது மாயமான விக்ரம் லேண்டர் சேதம் அடையாமல் முழுமையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

சந்திரயான் -2 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 7 ந்தேதி அதிகாலை ஒன்று 38 மணியளவில் நிலவில் தரையிறங்கும் போது 2 புள்ளி 1 கிலோ மீட்டர் உயரத்தில் மாயமானது. பெங்களூருவில் உள்ள செயற்கோள் தரைகட்டுப்பாட்டு மையத்துடனான விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டனர். இந்நிலையில் நிலப்பரப்பில் விக்ரம் லேண்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பான தெர்மல் புகைப்படத்தை ஆர்பிட்டர் எடுத்து அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

அந்த புகைப்படத்தை ஆராய்ந்த போது மாயமான விக்ரம் லேண்டர் சேதம் அடையாமல் முழுமையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்