இந்தியா

என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே

என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேயுடன் தொடர்பில் இருந்த 37 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உத்தர பிரதேச டிஜிபிக்கு அம்மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
உத்தரபிரதேச மாநில பிரபல ரவுடி விகாஸ் துபேயை கைது செய்ய கடந்த ஜூலை 3 ஆம் தேதி கான்பூர் சென்ற போலீசார் மீது ரவுடிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பின்னர், ஜூலை 10 ஆம் தேதி விகாஸ் துபேயை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இந்நிலையில், கான்பூரில் பணியாற்றிய போது 37 போலீசார் விகாஸ் துபேக்கு உதவியதாக சிறப்பு விசாரணை குழு நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் 18 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 கான்ஸ்டபிள்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 8 போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், 22 போலீசாரை விசாரணைக்கு உட்படுத்த கோரியும் உள்துறை அமைச்சக செயலாளர் பரிந்துரைத்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு