இந்தியா

"மல்லையா-வுக்கு அருண்ஜெட்லி மறைமுகமாக உதவியுள்ளார்" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மறைமுகமாக உதவி செய்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது சந்திப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் எழுதி வரும் அருண் ஜெட்லி, விஜய் மல்லையா உடனான சந்திப்பு குறித்து எதுவும் கூறவில்லை என்றார்.

மல்லையாவுடன் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசியதாக ஜெட்லி கூறுவது முற்றிலும் பொய் என்று கூறியுள்ள ராகுல், லண்டன் செல்வதை விஜய் மல்லையா கூறியுள்ள நிலையில், இதுபற்றி சிபிஐ, அமலாக்கத்துறை, போலீஸிடம் அவர் ஏன் கூறவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் போர் விமானம் மற்றும் விஜய் மல்லையா விவகாரங்களில் அரசு பொய் சொல்வதாக அவர் கூறியுள்ளார். இருவர் இடையிலான சந்திப்பு குறித்து அருண் ஜெட்லி விளக்க வேண்டும் என்றும், பதவி விலக வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்