இந்தியா

Uttrapradesh | “என் ஒத்த மோமோஸ்-க்கு ஈடாகுமா உங்க தங்கம்?’’ - இந்தியாவையே உறைய வைத்த சிறுவன்

“என் ஒத்த மோமோஸ்-க்கு ஈடாகுமா உங்க தங்கம்?’’ - இந்தியாவையே உறைய வைத்த சிறுவன்

thanthitv

Uttrapradesh | “என் ஒத்த மோமோஸ்-க்கு ஈடாகுமா உங்க தங்கம்?’’ - இந்தியாவையே அதிர்ச்சியில் உறைய வைத்த சிறுவன் உ.பி.யில் மோமோஸ் சாப்பிட வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடிய சிறுவன் உத்தரபிரதேசத்தில் மோமோஸ் சாப்பிடுவதற்காக வீட்டில் இருந்த 85 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி மோமோஸ் வியாபாரியிடம் கொடுத்து வந்த சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ""பிரியாணிக்கு என் சொத்தையே எழுதி வச்சிடுவேன்னு"" நகைச்சுவாயா சொல்றத பார்த்திருப்போம்.... ""இந்த சாப்பாடு செஞ்ச கைக்கு தங்க வளையல்தான் போடணும்""னு பாராட்டுறத கூட கேட்டிருப்போம்... ஆனா தினமும் மோமோஸ் சாப்பிடுறதுக்காக வீட்டிலிருந்த 85 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை மோமோஸ் வியாபாரிகளுக்கு கொடுத்திருக்கிறான், உத்தரபிரதேச மாநிலம் தியோரியா பகுதியை சேர்ந்த இந்த சிறுவன்... திடீரென சிறுவனின் வீட்டுக்கு வந்த அவரது அத்தை தனது நகைகளை கேட்டபோதுதான் வீட்டில் நகைகள் எதுவும் இல்லை என்பதே அந்த குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கு... இதுல இன்னொரு அதிர்ச்சி தர விஷயம் என்னன்னா.... சிறுவனுக்கு மோமோஸ் எந்த அளவுக்கு புடிச்சிருக்குன்னு தெரிஞ்சிகிட்ட மோமோஸ் வியாபாரிகள்... ஆரம்பத்துல அவனுக்கு இலவசமா மோமோஸ்கள கொடுத்து வந்திருக்காங்க.... பிறகு வீட்டில் இருந்து நகைகளை கொண்டு வந்து கொடுத்தால் தான் மோமோஸ் கொடுப்போம்னு சொல்லி இருக்காங்க... இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை விமலேஷ் மிஸ்ரா போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து மோமோஸ் வியாபாரிகளிடமிருந்து சில நகைகள் மீட்கப்பட்டதா கூறப்படுது.... தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு