Uttar Pradesh | கடைக்குள் நுழைய முயன்ற திருடன்- வலையில் சிக்கி தொங்கிய பரிதாபம்
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சிலில், கடையில் திருட முயன்ற நபர், அங்கிருந்த வலையில் சிக்கி தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடையின் ஷட்டருக்கு இடையே நுழைய முயன்றபோது, அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வலையில் அவர் சிக்கிக்கொண்டார். மறுநாள் காலை கடையைத் திறக்க வந்த உரிமையாளர், வலையில் தொங்கியபடி இருந்த நபரை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வலையை வெட்டி அந்த நபரை பத்திரமாக மீட்டனர்.