உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, அவரது வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய நாராயணசாமி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் பெண்கள் கற்பழிப்பு சம்பவம் தொடர் கதையாகி வருவதாக குற்றம்சாட்டினார்.