உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் கோட்டா என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியில் உள்ள 81 மாணவர்களுக்கு ஒரு லிட்டர் பாலை ஒரு வாளி தண்ணீரில் கலந்து கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆரம்ப பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 150 மில்லி லிட்டர் பால் வழங்க வேண்டும் என உத்தரவு உள்ள நிலையில் 81 குழந்தைகளுக்கு ஒரு லிட்டர் பால் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு ரொட்டிக்கு உப்பு வழங்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது...