உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.