இந்தியா

மோசமான கையெழுத்து - டாக்டர்களுக்கு அபராதம்...

உத்தரப் பிரதேசத்தில், மோசமான கையெழுத்துடன் மருந்துச்சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

* உன்னாவோ நகரில் மருந்துச் சீட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு மருந்து வழங்கப்பட்டதால் ஒருவர் பாதிக்கப்பட்டார். கோண்டா மாவட்டத்தில் பணிபுரியும் இரு மருத்துவர்களின் கையெழுத்தும் புரியாததால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

* லக்னோ நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் டாக்டர்கள் ஜெய்ஷ்வால், பி.கே.கோயல், ஆஷிஸ் சக்ஸேனா ஆகியோருக்குத் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு, மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் தெளிவாக எழுத உத்தரவிடும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கம்ப்யூட்டரில் அடித்து மருந்துச்சீட்டு வழங்கினால் என்ன, என்றும் நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்