இந்தியா

யு.பி.எஸ்.சி., தேர்வு தேதிகளில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு - தேதியை மாற்ற தேர்வர்கள் கோரிக்கை

செப்டம்பர் மாதம் யு.பி.எஸ்.சி., தேர்வுகள் நடக்கும் தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளும் அறிவிக்கப்பட்டிருப்பதால், தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

யு.பி.எஸ்.சி., தேர்வு தேதிகளில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு

பல்வேறு பணிகளுக்கான யு.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வுகள், வரும் செப்டம்பர் 28 முதல், அக்டோபர் 7 ம் தேதி வரை நடக்கின்றன. இதற்கான தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்ந்த பணிகளுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., இன்று வெளியிட்டுள்ளது. அதில், செப்டம்பர் 28 ல் இருந்து, 30 வரை போட்டித் தேர்வுகள் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

யு.பி.எஸ்.சி., அறிவித்த அதே தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வும் அறிவிக்கப்பட்டிருப்பது, தேர்வர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு தேர்வுகளிலும் தேர்வர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தேதிகளை தள்ளி வைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்