இந்தியா

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய பணியாளர் தேர்வாணையம்

கொரோனா பரவல் காரணமாக சில தேர்வுகளை தள்ளிவைக்க மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது.

தந்தி டிவி
கொரோனாவால் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதால், மே 9ம் தேதி நடைபெற இருந்த பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆள்சேர்ப்பு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இன்று தொடங்க இருந்த இந்திய பொருளாதார சேவை தேர்வும், 26ம் தேதி தொடங்க இருந்த குடிமைப் பணிக்கான நேர்முக தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவெடுத்துள்ளது. கொரோனா சூழலை பொறுத்து புதிய தேதி முடிவு செய்யப்படும் எனவும், தேர்வுக்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக தேர்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்