#upelectioncommissionissue #upchiefelectoralofficierapology உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறாக அச்சிடப்பட்டதற்கு, தேர்தல் அதிகாரி ஒருவர் நக்கலாக பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இதற்கு தேர்தல் ஆணையம் தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளது.. உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் கணினி மென்பொருள் குளறுபடியால் 'ராம்ஹித் யாதவ்' என்ற பெயர், "ராம் என்பவர் யாதவை அடித்தார்" என தவறாக அச்சிடப்பட்டது. இதனைச் சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த உ.பி. தலைமை தேர்தல் அதிகாரி, "நல்லவேளை, ராம் என்பவர் சிறுபான்மையினரை அடித்ததாக பெயர் வரவில்லை. அப்படி வந்திருந்தால் மத கலவரத்தை தூண்டுவதாக பழி சுமத்தியிருப்பீர்கள்" என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அந்த பதிவுக்கு தேர்தல் ஆணையம் மன்னிப்பு கோரியுள்ளது.