இந்தியா

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நூறு சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தந்தி டிவி

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நூறு சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதற்காக, அடுத்த 3 நிதி ஆண்டுகளுக்கு, 41 ஆயிரத்து 600 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கும். பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 8 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியம் வழங்க, 3 ஆயிரத்து 109 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

20 ஆயிரம் கோடி மதிப்பில், மீன்வளத்துறைக்கான புதிய திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்க ஏல புதிய வழிமுறைகளுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல், மூத்த குடிமக்களுக்கு, முதலீட்டின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கும் திட்ட நீ்ட்டிப்பு உள்ளிட்டவைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு