இந்தியா

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி பங்கேற்பு - வரும் 25ம் தேதி மோடி உரையாற்றுவார் என அறிவிப்பு

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி பங்கேற்பு - வரும் 25ம் தேதி மோடி உரையாற்றுவார் என அறிவிப்பு

தந்தி டிவி

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி பங்கேற்பு - வரும் 25ம் தேதி மோடி உரையாற்றுவார் என அறிவிப்பு

வரும் 25ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். ஐ.நா. பொதுசபையின் 76வது அமர்வு நியூயார்க் நகரில் வரும் 21ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடைபெறும் உயர்மட்ட பிரிவின் பொது விவாதத்தில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இந்தியா சார்பில் 25ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுவார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள உளார். முன்னதாக 24ம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டிலும் மோடி பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்