இந்தியா

UGC | Student | பெற்றோர்களுக்கு ஷாக் நியூஸ்.. எதிர்காலமே கேள்விக்குறி.. வெளியான ரிப்போர்ட்

பெற்றோர்களுக்கு ஷாக் நியூஸ்.. எதிர்காலமே கேள்விக்குறி.. வெளியான ரிப்போர்ட்

thanthitv

UGC | Student | பெற்றோர்களுக்கு ஷாக் நியூஸ்.. எதிர்காலமே கேள்விக்குறி.. வெளியான ரிப்போர்ட் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் UGC எனப்படும் பல்கலைகழக மானியக் குழு, உரிய அங்கீகாரம் இன்றி செயல்படும் 32 கல்வி நிறுவனங்கள் போலி என கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, யூஜிசி வெளியிட்டுள்ள போலி பல்கலைகழகங்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில், 12 போலி பல்கலைக்கழகங்களுடன் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் 4 பல்கலைகழகம் செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 2 போலி பல்கலைக்கழகங்களும். அருணாச்சல பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் ஒரே ஒரு போலி பல்கலைகழகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, யுஜிசி சட்டத்தின் படி, மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே 'பல்கலைக்கழகம்' என்ற பெயரைப் பயன்படுத்த முடியும் என்றும், இந்தப் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்குப் பட்டம் வழங்க எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளது. எனவே, மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கு முன், அந்த நிறுவனத்தின் அங்கீகாரத்தை யுஜிசி இணையதளத்தில் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்