இந்தியா

மாணவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல்..தங்கும் விடுதியிலேயே தனி அறை..மூணாறில் பள்ளி மூடல்

தந்தி டிவி

கேரள மாநிலம் மூணாறில், டைபாய்டு காய்ச்சல் பரவியதால், அரசு உண்டு உறைவிட பள்ளி மூடப்பட்டது. மூணாறு, காலனி பகுதியில் செயல்படும் பள்ளியில், மலைவாழ் மக்கள் இன மாணவர்கள் உட்பட 260 பேர் விடுதியில் தங்கி, +2 வரை பயின்று வருகின்றனர். இதில் 14 மாணவர்களுக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதில் 6 மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய 8 மாணவர்களை தங்கும் விடுதியிலேயே தனி அறையில் வைத்து சுகாதார மையத்தினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், மேலும் 6 பேருக்கு டைபாய்டு காய்ச்சல் உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின்பேரில் அந்தப் பள்ளி மூடப்பட்டது. 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்