இந்தியா

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி விருது

இந்தாண்டுக்கான பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகளை தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது

தந்தி டிவி

இந்தாண்டுக்கான பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகளை தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது

பால புரஷ்கார் பிரிவில், 21 விருதுகளும், யுவ புரஷ்கார் பிரிவில் 21 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 22 மொழிகளை சேர்ந்த நடுவர் குழு இந்த விருதுகளை தேர்வு செய்துள்ளது. சிறகு முளைத்த யானை என்ற கவிதை தொகுப்புகாக தமிழகத்தை சேர்ந்த கிருங்கை சேதுபதிக்கு, பால புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அம்பு படுக்கை என்ற சிறுகதை தொகுப்பிற்காக தமிழகத்தை சேர்ந்த சுனில் கிருஷ்ண‌ன் என்பவருக்கு யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகள் நேரு பிறந்தநாளான நவம்பர் 14 ஆம் தேதி வழங்கப்பட உள்ளன. விருது பெறும் கலைஞர்களுக்கு விருதுகளுடன் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்படும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்