இந்தியா

டிவி நிகழ்ச்சியில் கொடூரமாக அடித்துக்கொண்ட இருவர்... -பறந்த சேர்..! பதறிய மக்கள்

தந்தி டிவி

தெலுங்கானாவில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானாவில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனம் வெற்றி யாருடையது? என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், குத்பல்லாபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளர் விவேகானந்தர் கவுடு, பாஜக வேட்பாளர் ஸ்ரீசைலம் கவுடு கலந்து கொண்டு பேசினர். அப்போது இரண்டு பேருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில், கட்சி தொண்டர்களும் தாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இரண்டு பேரையும் சமாதானம் செய்து நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்