உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இளம்பெண் ஒருவருக்கு அவருடைய கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார். மனைவியை பிரிந்து வாழ முடிவு செய்த அவர், 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் முத்தலாக் கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்யுமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.