பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, உபா சட்டத்தை பயன்படுத்தி, அரசியலில் தங்களுக்கு எதிராக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்ற வகையில் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியை குலைக்கும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியிருப்பது மூலம் மதக்கலவரத்தை உருவாக்கவும் மோடி அரசு திட்டமிட்டு உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.