இந்தியா

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்

முத்தலாக் தடை மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

தந்தி டிவி

2018ஆம் ஆண்டின் இறுதி நாளான இன்று முத்தலாக் தடை மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஏற்கனவே மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து, மாநிலங்களவையில் கட்சி உறுப்பினர்கள் தவறாமல் ஆஜராகுமாறு பாஜக மற்றும் காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில், ஆளும் பாஜக கூட்டணியின் எம்.பிக்களின் பலம் 89 ஆக உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பலம் 62 ஆகவும், இதர கட்சிகளின் பலம் 82 ஆகவும் உள்ளது. இதர கட்சிகளில் அதிமுக, சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் முத்தலாக் தடை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலங்களவையில் ஆளும் பாஜகவின் பலம் குறைவாக இருப்பதால், மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’