இந்தியா

போட்டி பரிசால் கிடைத்த பொக்கிஷம் - உடல் சிலிர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

புதுச்சேரியில் தங்களுக்கு கிடைத்த பரிசு தொகை மூலம் 462 அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய சகோதர மாணவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

புதுச்சேரி, முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் சகோதரர்களான விஜய விஜேஷ்குமார், விஜய விவேஷ்குமார் ஆகியோர் சதுரங்கம், திருக்குறள் ஒப்புவித்தல் உள்பட பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்று வருகின்றனர். அவர்கள் தனியார் பள்ளிகளை போல தனது பள்ளி மாணவர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என விரும்பினர்

அதற்காக போட்டிகளில் பெற்ற பரிசுத்தொகை 10 ஆயிரத்தை கொண்டு அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்தனர். தங்களது விருப்பத்துக்கு பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியரும் உடனே ஒப்புதல் வழங்கினர். இதையடுத்து பள்ளியில் படிக்கும் 462 மாணவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. சகோதர மாணவர்களின் செயலை ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர்.

Erode | Morning Food | பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலப்பு.. ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Sanitation worker | தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்.. உறுதி கொடுத்த தமிழக அரசு

BREAKING || நல்ல செய்தி சொல்லி அனுப்பிய CM விஜய் - தூய்மை பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Kovai Incident கோவையில் முக்கிய புள்ளி வீட்டிலேயே கை வைத்ததால் பரபரப்பு - கொஞ்ச நஞ்சமில்ல..

Namakkal Accident | ஒரே குடும்பத்தில் 4 மாணவிகள் பலியான சம்பவம் | மனவேதனையுடன் அறிவித்த CM விஜய்