இந்தியா

தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை மரணம் - தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த சோகம்

கேரள சட்டமன்றத் தோ்தலில் போட்டியிட்ட பிரபல திருநங்கை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கேரள சட்டமன்றத் தோ்தலில் போட்டியிட்ட பிரபல திருநங்கை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.12ஆம் வகுப்புடன் கல்வியை கைவிட்ட கொல்லத்தைச் சோ்ந்த திருநங்கை அனன்யாகுமாரி, வானொலி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளா், மேடை நிகழ்ச்சி தொகுப்பாளா் என பண்முகம் கொண்டு உயர்ந்துள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்றத் தோ்தலில் ஜனநாயக சமூக நீதிக் கட்சி சார்பில் போட்டியிட்டார். இதனிடையே, எா்ணாகுளத்தில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் அன்று மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனிடையே, அவர் கடந்த ஆண்டு பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதன் பின்னர், கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறிய நண்பர்கள், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறினர். தவறான சிகிச்சையால் அனன்யா பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவ இயக்குநர் விசாரிக்குமாறு அமைச்சா் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். பாலின மாற்று அறுவை சிகிச்சை குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனை குழு சேகரிக்க உள்ளது. அனன்யா மரணத்துக்கு நீதி வேண்டும் என திருநங்கைகள் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்