Train Cell Phone Theft | ரயிலில் தொடரும் செல்போன் பறிப்பு - பொதுமக்களிடம் கையும் களவுமாக சிக்கிய திருடர்கள்.. தீயாய் பரவும் வீடியோ நாகர்கோவில் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணிடம் செல்போன்களைப் பறித்து தப்பியோட முயன்ற திருடனை, சக பயணிகள் துணிச்சலாக விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மும்பை அருகே குர்டுவாடி - தவுண்ட் இடையே மர்ம நபர்கள் இருவர், ஒரு பெண்ணிடமிருந்த இரண்டு செல்போன்களைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்றனர். அப்போது பயணிகள் துணிச்சலாக செயல்பட்டு, திருடர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து நடைபெறும் திருட்டுகளைத் தடுக்க ரயில்வே பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.