இந்தியா

குடித்து விட்டு கூலாக வந்த என்ஜின் டிரைவர்-பிளாட்பாரமில் பாய்ந்த ரயில்பதைபதைக்க வைக்கும் காட்சி

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்தில் இருந்து, கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்ட மின்சார ரயில், மதுரா ரயில் நிலையம் சென்றபோது, திடீரென எஞ்சின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டது. இதில், ரயில் எஞ்சின் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி பிளாட்பாரம் மீது ஏறி நின்றது. இதனால் பிளாட்பாரத்தில் காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடி தப்பினர். சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், மதுபோதையில் ஊழியர் ரயிலை கையாண்டதும், செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த ஆதாரங்கள் சி.சி.டி.வி.யில் பதிவான நிலையில், சச்சின் என்ற ஊழியர் உட்பட 5 பேரை, கோட்ட ரயில்வே மேலாளர் தேஜ்பிரகாஷ் அகர்வால் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்