இந்தியா

11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உலக வங்கி மற்றும் நபார்ட்டு வங்கி இணைந்து சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில் செண்பக தோப்பு அணை கடந்த 2007 ல் கட்டப்பட்டது..

பணிகள் முடிவடைந்து அணை திறக்கப்படும் நிலையில் அணையின் 7 இரும்பு ஷட்டர்கள் பழுதடைந்து மூடமுடியாத நிலை ஏற்பட்டதால் அணை பயன்பாட்டிற்க்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக அணையின் மதகுகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்காததால் 46க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். ஆனால், தற்போதைய கலசம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் அணையை சீரமைக்க உள்ளதாக கூறுகிறார்.

அணை எப்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு வரும் என்பதே பொதுமக்களில் கேள்வியாக உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்