இந்தியா

மொட்டையடித்து கங்கையில் குளித்த எம்எல்ஏ: திரிபுராவில் பாஜக அதிருப்தி எம்எல்ஏ நூதனம்

திரிபுராவில் பாஜக அதிருப்தி எம்எல்ஏ முதலமைச்சரை கண்டித்து மொட்டை போட்டுக் கொண்டார்.

தந்தி டிவி
திரிபுராவில் பாஜக அதிருப்தி எம்எல்ஏ முதலமைச்சரை கண்டித்து மொட்டை போட்டுக் கொண்டார். திரிபுராவில் ஆளும் பாஜக எம்எல்ஏக்களில் சிலர் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏவான ஆஷிஸ்தாஸ் அண்மையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை புகழ்ந்து கருத்து தெரிவித்து வந்தார். கொல்கத்தாவில் உள்ள காளிகோயிலுக்கு சென்ற அவர் மொட்டை அடித்துக் கொண்டு கங்கையில் நீராடினார். தனது பாவத்தை போக்கிக் கொள்ள கங்கையில் நீராடியதாகவும், 2023ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வரை மொட்டைத் தலையுடனேயே இருக்கப் போவதாக அவர் கூறினார்.


CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்