Tirupati | திருப்பதி ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம்
#tirupati #umbrella #thanthitv
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதத் திருக்குடைகள் திருமலை தேவஸ்தான அதிகாரிகளிடம் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டன. இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த திருக்குடைகள், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சுமார் 15 லட்சம் பக்தர்களின் ஆசிகளுடன் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டன. தற்போது இந்த திருக்குடைகள் திருப்பதி மலையை அடைந்த நிலையில், அவற்றை டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தேவஸ்தான அதிகாரிகளிடம் நேரில் ஒப்படைத்தார்.