அக்ஷய் குமார் வீட்டில் பலத்த பாதுகாப்பு - அவரச அவசரமாக பொருத்தப்படும் 'புல்லட்-புரூஃப்' கண்ணாடி
#AkshayKumar #SalmanKhan #thanthitv
பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... இந்நிலையில், ஏற்கனவே 'ஒய்-ப்ளஸ்' (Y+) பாதுகாப்பு பெற்றுள்ள சல்மான் கானின் வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், நடிகர் அக்ஷய் குமாரின் வீட்டில் பலத்த பாதுகாப்புடன் கூடிய 'புல்லட்-புரூஃப்' கண்ணாடிகளை பொருத்தும் பணிகள் அவசரமாக நடைபெற்று வருகின்றன.