இந்தியா

மீண்டும் நாடாளுமன்றத்தில் அந்த 4 பேர்.. டெல்லி போலீஸின் அதிரடி திட்டம்

தந்தி டிவி

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது... இந்நிலையில், இந்த பாதுகாப்பு மீறலை எவ்வாறு நிகழ்த்தினார்கள் என்பது தொடர்பாக சம்பவத்தன்று நடைபெற்றது போல குற்றச் செயலை மீண்டும் காவல் துறையின் முன்பு குற்றவாளிகளைக் கொண்டு நடத்திக் காட்ட விடுமுறை நாட்களான நாளை அல்லது நாளை மறுநாள் அவர்கள் அழைத்து வரப்பட உள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது... அதன்படி டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழுவால் கைது செய்யப்பட்டவர்கள் நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்டு சம்பவத்தன்று நடைபெற்ற காட்சியை மீண்டும் உருவாக்கி விசாரணையைத் தொடர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்... இதைத் தவிர குற்றச் செயலுக்கு முன்பாக கைது செய்யப்பட்டவர்கள் குரு கிராமில் சந்தித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் தங்கி இருந்த அறைகளுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த 15 நாட்களில் 50 கைப்பேசி எண்களுக்குப் பேசியுள்ளது தெரியவந்ததாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Breaking | WPL 2026 | RCB | மீண்டும் வாகை சூடிய பெங்களூரு

Virudhunagar | Trains | நடுவழியில் நிறுத்தப்பட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் | கடும் அவதியில் பயணிகள்

Breaking | Coal Mine | சுரங்கத்தில் வெடிவிபத்தில்... கொடூர மரணம்.. 18 பேர் சிதறி பலி

Breaking | TVK Vijay | "அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?" | விஜய் மக்கள் சந்திப்பில் சிக்கல்

BREAKING || "நாளைக்குள்..." - எதிர்பாரா நேரம் விஜய்க்கு அடுத்த சிக்கல்?