``இது போர்க்குற்றம்’’.. இந்தியாவையே கொதிக்கவிட்ட எதிர்பாரா தாக்குதல் லெபனான் ஐ.நா. சமாதான படையின் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் லெபனானில் உள்ள ஐநாவின் தற்காலிக சமாதான படை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. லெபனானில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தற்காலிக சமாதான படைப்பணியில் சுமார் 600 இந்திய படைகள் பணியாற்றுவதாக தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஐக்கிய நாடுகளின் சமாதானப் பணிகளில் மிகப்பெரிய படைகளை வழங்கும் நாடு இந்தியா என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்திய படைகளின் பங்களிப்பு உலக சமாதானத்திற்கு மிக முக்கியமானது என்று மதிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், இந்திய சமாதான படைகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டிய சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதாக தெரிவித்தார்.இது ஒரு போர்க்குற்றமாகக் கருதப்படும் எனவும் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலும் எச்சரிக்கை விடுத்துள்ளது. U