ரயில் நிலைய பராமரிப்பு - நடைமேடையில் கவிழ்ந்த ராட்சத கிரேன் கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிக்காக கொண்டு வரப்பட்ட ராட்சத கிரேன் நடைமேடையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. பயணிகளின்றி நடைமேடை காலியாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.