புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறில் சொகுசு வீட்டில் நள்ளிரவில் மூட்டை மூட்டையாக குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
திருநள்ளாறு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர்... அவர்களுக்கு மலர்க்கொடி என்ற பெண் தான் விநியோகித்ததாகக் கூறிய நிலையில் அதிகாரிகள் நள்ளிரவில் மலர்க்கொடியின் வீட்டிற்கு சென்றனர்... விலை உயர்ந்த கார்கள், சொகுசு வீடு என சுகபோகமாக வாழ்ந்து வந்த மலர்க்கொடியிடம் விசாரணை நடத்தி வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்தனர்... அதிகாரிகள் அப்பெண்ணை சரமாரியாக கேள்விகேட்டு விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை பாயப்போவதாக எச்சரித்துள்ளனர்.