இந்தியா

பாகல்பூர்||பீகாரில் ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்று சிக்கிய திருடன்

பீகாரில் ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்று சிக்கிய திருடன்

thanthitv

பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே, ஓடும் ரயிலில் பயணியின் செல்போனை பறிக்க முயன்ற திருடன், ஜன்னலில் தொங்கியபடியே தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகல்பூர் மாவட்டம் சிவநாராயண்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மெதுவாக புறப்பட்டபோது, ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த பயணியின் செல்போனை வெளியே நின்றிருந்தவாறு அந்த நபர் பறிக்க முயன்றுள்ளார்.

​ஆனால் பயணியும் அருகில் இருந்தவர்களும் உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு அந்த திருடனின் கையை ஜன்னல் வழியே இறுகப் பற்றிக் கொண்டனர். பயணிகள் கையை விடாததால், நடைமேடையில் சில தூரம் ஆபத்தான முறையில் தொங்கியபடியே அந்த திருடன் இழுத்து செய்யப்பட்ட நிலையில், கடைசியாக கீழே விழுந்து காயமடைந்த திருடனை ரயில்வே காவலர்கள் உடனடியாகக் கைது செய்தனர்..

CJP Protest | Delhi | திகாரில் CJP நிர்வாகிகள்?.. டெல்லியில் களேபரம்

MetturDam | மேட்டூர் அணையையே ஆட்டம் காண வைத்த எல்நினோ - அடியோடு மாற்றம்.. நடுக்கத்தில் மக்கள்

Gold Price Today| சரிந்து கொண்டே வரும் தங்கம் - நேற்றை விட இன்று அமர்க்களம்

Online Trading ``லட்சங்கள் கொட்டும்.. டிரேட் பண்ண நாங்க சொல்லி தரோம்’’ - ரீல்ஸ் மோசடி இளைஞர்கள் கைது

Train | Arrest | ரயிலில் அதிக சத்தமாக பாட்டு கேட்டால் 6 மாதம் சிறை - தெற்கு ரயில்வே அதிரடி