இந்தியா

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு விவகாரம் - தமிழகம் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவு

தென் பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகா - தமிழகம் இடையே பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

தென் பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு மற்றும் யர்கோல் பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசை அணுகுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, நதிநீர் ப​ங்கீடு தொடர்பாக தீர்ப்பாயம் அல்லது குழுவை அமைக்கக் கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் அதனை ஏற்று, இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைத்து, மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 24ம் நடைபெறும் குழுவின் முதல் கூட்டத்தில், இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு பிரச்சனைக்கு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு