இந்தியா

கேரளாவை நடுங்க வைத்த ராணுவ வீரர்... விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தந்தி டிவி

கொல்லம், கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் ஷைன்குமார். ராணுவ வீரரான இவர், ராஜஸ்தானில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது, ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக தன் நண்பரின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டு திரும்பிய ஷைன்குமாரை, மர்மகும்பல் கடத்தி சென்று தாக்கியதாகவும், முதுகில் PFI முத்திரை குத்தியதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில், ராணுவ வீரரான ஷைன்குமார், தான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தனது நண்பர் ஜோஷி என்பவரை வைத்து அரங்கேற்றிய நாடகம் என்பது தெரியவந்தது. உடனே, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்