இந்தியா

"சபரிமலை விவகாரம் மன்னிப்பு கேட்கவில்லை" - கடகம்பள்ளி சுரேந்திரன் விளக்கம்

கேரளா சட்டமன்ற தேர்தலுக்கு முன் சபரிமலை பிரச்சினைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றும்,வன்முறைக்கு மட்டுமே வருத்தம் தெரிவிப்பதாக கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டசபையில் விளக்கமளித்தார்.

தந்தி டிவி

"சபரிமலை விவகாரம் மன்னிப்பு கேட்கவில்லை" - கடகம்பள்ளி சுரேந்திரன் விளக்கம்

கேரளா சட்டமன்ற தேர்தலுக்கு முன் சபரிமலை பிரச்சினைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றும்,வன்முறைக்கு மட்டுமே வருத்தம் தெரிவிப்பதாக கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டசபையில் விளக்கமளித்தார்.சபரிமலைக்குள் அனைத்து தரப்பு வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு போலீஸ் உதவியுடன் சில பெண்கள் கோவிலுக்கு நுழைய முயன்றதால் சர்ச்சை வெடித்தது. சபரிமலையில் நடந்த சம்பவங்கள் குறித்து மன்னிப்பு கேட்பதாக, தேவசம்போடு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கடந்த மார்ச் 11 தேதி கேரளா சட்டமன்ற தேர்தலுக்கு முன் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இது தொடர்பாக சட்டமன்றத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், சபரிமலை பிரச்சினைக்கு நான் மன்னிப்பு கேட்கவில்லை, வன்முறைக்கு மட்டுமே வருத்தம் தெரிவிப்பதாக விளக்கமளித்தார். ஊடகங்களில் வந்த செய்திக்கு விளக்கம் அளித்திருந்தால், அது எதிர்க்கட்சியினர் பிரச்சாரத்திற்கு வழிவகுத்திருக்கும் என்பதால், தற்பொழுது விளக்கம் அளிப்பதாக கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி