1996 ராஜஸ்தான் பஸ் குண்டுவெடிப்பு வழக்கு - மரண தண்டனை ரத்து 1996-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில், பேருந்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்த வழக்கில், அப்துல் ஹமீதுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதை தொடர்ந்து, இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சலீமை விடுதலை செய்யவும், வழக்கை மூத்த நீதிபதி தலைமையில் புதிதாக விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.