இந்தியா

பலத்த சத்தத்துடன் வெடித்து எரிந்த கார்...ஓட்டுநர் தீயில் கருகி பலி - அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்

தந்தி டிவி

பலத்த சத்தத்துடன் வெடித்து எரிந்த கார்...ஓட்டுநர் தீயில் கருகி பலி - அதிகாலையில் நேர்ந்த பயங்கரம்

கேரளாவில், கார் தீப்பற்றி எரிந்ததில் அதன் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். கேரள மாநிலம், கண்டியூர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ண பிரகாஷ். இன்று அதிகாலை இவர் தனது காரை வீட்டிற்குள் நிறுத்திய போது திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து, கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதில், காரில் இருந்த கிருஷ்ண பிரகாஷ் வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்து, அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பி வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்