Telangana | Bus Accident | பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் | உள்ளே இருந்த பயணிகள் நிலை? | ஷாக் தகவல்
பேருந்து கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி, 20 பேர் காயம் தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் அனந்தகிரியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். கேசரத்தில் இருந்து சிந்தகுண்டா நோக்கிச் சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள், பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க உதவினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.