AAP Leader Resignation ``ஆம் ஆத்மி ஊழலின் கூடாரமாகிவிட்டது; கட்சியில் இருந்தே விலகுகிறேன்’’
#aamaadmiparty #kejriwal #delhi #thanthitv
நேர்மையான அரசியலை முன்னிறுத்தித் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஊழலின் கூடாரமாக மாறிவிட்டது என அக்கட்சியின் முக்கிய முகமான சுவாதி மாலிவால் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பயணித்த சுவாதி மாலிவால், தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழலை ஒழிக்க வந்த கட்சி இன்று ஊழலில் மூழ்கிவிட்டதாகவும், தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களும் ஆம் ஆத்மி கட்சியை விட்டு தாம் விலக முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.