இந்தியா

குழந்தை மீது விழுந்த தண்ணீர் டேங்க் - துடி துடித்து பலியான பயங்கரம்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருகம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் தமிழரசன் - நந்தினி தம்பதி. இவர்களது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை மேல் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்த‌து. இந்த தண்ணீர் தொட்டி வியாழக்கிழமை மேற்கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த‌தில், தமிழரசன் - நந்தினி தம்பதியின் திவ்யஸ்ரீ என்ற 3 வயது குழந்தை படுகாயமடைந்த‌து. படுகாயமடைந்த குழந்தை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த‌து. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த‌து. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு