இந்தியா

உத்தரபிரதேசத்தில் கழிவுநீர் தொட்டி - காவு வாங்கிய கோரம் துடிதுடித்து- போன 4 உயிர்

தந்தி டிவி

சந்தோலி மாவட்டத்தில் உள்ள தீன்தயாள் நகர் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொட்டிக்குள் இறங்கிய துப்புரவு பணியாளர் ஒருவர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற மற்ற இரு தொழிலாளிகளும் இறங்கிய நிலையில் அவர்களும் விஷ வாயு தாக்கி மயங்கினர். இதனை தொடர்ந்து, வீட்டின் உரிமையாளரின் மகன் அங்கூர் ஜெய்ஸ்வால் தொழிலாளர்களை காப்பாற்ற கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது அவரும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர்கள் எற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?