இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன மாணவர்களை மீட்டது இப்படி தான்!

தந்தி டிவி

தேர்வில் தேர்ச்சி பெறாததால் பெற்றோருக்கு பயந்து பள்ளியிலிருந்து ஓடிய 2 மாணவர்களை 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 2 மாணவர்கள் பள்ளி முடிந்தவுடன் அங்கிருந்து ஓடி விட்ட நிலையில் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். 7 போலீஸ் குழு அமைக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் 40 கிலோமீட்டர் தொலைவில் டெல்லியில் உள்ள ஆனந்த் விஹாரில் சிறுவர்களைக் கண்டுபிடித்தனர்.

உத்தரப் பிரதேச மாநில காவல்துறை ஆணையர் லட்சுமி சிங், சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். துரிதமாக செயல்பட்டு சிறுவர்களை மீட்ட போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்