இந்தியா

ஒரே நேரத்தில் 12 இடங்களில் அதிரடி ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள் - பரபரப்பில் கர்நாடகா

தந்தி டிவி

12 கர்நாடகா அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் லஞ்சம்

வாங்கியதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து

சேர்த்ததாகவும் கர்நாடகா லோக் ஆயுக்தாவிற்கு புகார்கள்

குவிந்தன. இதை தொடர்ந்து 12 அதிகாரிகளுக்குச் சொந்தமான 55 இடங்களில், லோக் ஆயுக்த போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, துமக்கூரு சிமோகா, யாதகிரி, மண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழில் மற்றும்

வணிகத்துறை கூடுதல் இயக்குனர் முத்துக்குமார், வணிகவரித் துறை இணை ஆணையர் ரமேஷ் குமார், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவமொக்கா பிரகாஷ் உள்ளிட்ட 12 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா போலீசார் சோதனையில் ஈடுபட்டு பல்வேறு

முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்