தேனி மாவட்டம் அணைக்கரை பட்டியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் பயிலும் 13 மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் அம்மை நோய் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தொற்றுநோய் நிபுணர் பூச்சியியல் வல்லுநர் உள்ளிட்ட மூன்று மருத்துவர் கொண்ட குழுவினர் சிறுவர்களை பரிசோதித்த நிலையில், காய்ச்சல், அம்மை நோய் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய உள்ளனர்.