இந்தியா

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

தந்தி டிவி

3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. ஆயுதங்கள் பறிமுதல் - தேடுதல் பணி தீவிரம்

காஷ்மீரில் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்று உள்ளனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களில் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து, காஷ்மீர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை போலீசார் பிடிக்க சென்றபோது, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து தீவிரவாதிகள் 3 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லக்‌ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், காஷ்மீர் முழுவதும் தேடுதல் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்