இந்தியா

சத்தீஷ்கரில் பயங்கர துப்பாக்கி சண்டை - 22 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் உடனான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 22 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் உடனான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 22 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஷ்கரில் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்கும் அவர்களை ஒடுக்கும் பணியில் மத்திய, மாநில பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இப்படையினர் நேற்று சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் தரம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாவோயிஸ்ட்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் பலரை காணவில்லை என தகவல் வெளியாகிய நிலையில் இன்று மோதல் நடைபெற்ற இடத்தில் இருந்து 17 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். தாக்குதலில் 22 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தொடர்கிறது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்