"சிவபெருமான் அழைக்கிறார்" - கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவி மாயம் தெலுங்கானாவில், 19 வயது மாணவி "சிவபெருமான் தன்னை அழைக்கிறார்" என உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி காணாமல் போன நிலையில், தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணவியின் காதலை பெற்றோர் கண்டித்ததால் விரக்தியடைந்து, யாருடனும் பேசாமல் தியானத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், "சிவபெருமான் அழைக்கிறார்" என கூறி மாயமான மாணவியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.